ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பனாக வந்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் இந்திய அளவில் அவருக்கு புகழை ஈட்டித்தந்துள்ளது. பாகுபலி படத்தில் வில்லன் வேடத்தில் மிரட்டியதற்காக ராணாவிற்கு ஆசியாவிசன் மூவி அவார்ட்ஸ் 2016, விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. தென்னிந்திய திரைப்பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக துபாயில் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றவுள்ள ஆசியாவிசன் மூவி அவார்ட்ஸ் 2016 விருது வழங்கும் விழாவில் சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகுபலி படத்திற்காக முதல் விருதை வென்றுள்ள மகிழ்ச்சியை ராணா தானே ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். பெங்களூர் டேய்ஸ் எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யா உள்ளிட்டோருடன் நடித்து வரும் ராணா அண்மையில் அப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்துள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ராணா தயாராகி வருகின்றார்.