ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்தார் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்குகின்றார். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கின்றார். நடிகர் மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குஜராத்தில் நடைபெறும் சர்தார் படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வாலும் கலந்து கொண்டுள்ளார். பவன் கல்யாணுக்கும் காஜலுக்கும் இடையேயான காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்துடன் பவன் கல்யாண் பங்கேற்கும் நகைச்சுவை காட்சிகள் போன்றவை படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.