ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து அனுஷ்காவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அனுஷ்கா இப்படத்திற்காக தனது உடல் எடையைக் கூட்டி குண்டான உடல் தோற்றத்துடன் நடித்திருப்பதே இவ்வித எதிர்பார்ப்பிற்கு காரணம். பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ள இப்படம் சைஸ் ஜீரோ என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வருகின்றது. தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்ட இப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்றது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என கூறப்பட்ட இப்படத்திற்கு ஏன் யு/ஏ சான்றிதழ் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதில் தற்போது கசிந்துள்ளது. அனுஷ்காவும் ஆர்யாவும் இப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்திருப்பதாகவும் அதனை காட்சிப்படுத்திய விதம் எல்லை கடந்திருப்பதால் தணிக்கை அதிகாரிகள் சான்றிதழை மாற்றி இருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள சோனல் சௌகன் கவர்ச்சியாக நடித்திருக்கின்றார் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. இதுவும் யு/ஏ சான்றிதழுக்கு காரணம் என கூறப்படுகின்றது. இஞ்சி இடுப்பழகி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வருகின்றது.