சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவருமான விஜயகாந்த், தன் மகன் சண்முக பாண்டியனை சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்தப் படம் வெற்றிபெறவில்லை. பெரிய இயக்குனர்கள் மூலம் மகனை அடுத்த படத்தில் நடிக்க வைக்க விரும்பினார். இதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் அடுத்து மகனுடன் தானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்தார். அந்த படத்தின் தலைப்பு ''தமிழன் என்று சொல்''. இதனை தமிழ் ஸ்டூடியோஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் மீடியாக நெட்ஒர்க் சார்பில் கோவர்த்தினி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். அருண் பொன்னம்பலம் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். கொலஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாளை இதன் துவக்க விழா மற்றும் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடக்கிறது. இது தேர்தலையொட்டி உருவாகும் பரபர அரசியல் படம் என்கிறார்கள்.