Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா என்னை இம்ப்ரஸ் பண்ணவில்லை!- அனுஷ்கா

21 நவ, 2015 - 07:43 IST
எழுத்தின் அளவு:
Arya-did-not-impress-me-says-Anushka

10 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி வகித்து வருபவர் அனுஷ்கா. அருந்ததி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையான இவர், பாகுபலி, ருத்ரமா தேவி படங்களுக்குப்பிறகு மிகப்பெரிய இடத்துக்குப்போய் விட்டார். தற்போது பாகுபலி-2 படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். காரணம், இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 70 கிலோவுக்கு மேல் உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார் அனுஷ்கா. அதனால் இப்போது பாகுபலி-2வுக்காக பெரிய அளவில் உடல் எடையை குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் டயட்ஸ், உடற்பயிற்சி என்று ஜிம்மில்தான் பெரும்பகுதி நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, பாகுபலியில் ரொம்ப சின்ன ரோலில் நடித்து விட்டீர்களே? என்று கேட்கும் நட்பு வட்டாரங்களிடம், அடுத்த பாகத்தை நான்தான் அதிகமாக ஆக்ரமிக்கப்போகிறேன். அப்போது முதல் பாகத்தில் எதற்காக நான் விட்டுக்கொடுத்தேன் என்பது உங்களுக்கு புரியும் என்று பதில் கொடுத்து வருகிறார்.


மேலும், பெரும்பாலும் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்து வந்த அனுஷ்கா, பாகுபலி நாயகன் பிரபாசுடனான காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஆனால் இதுபற்றி அவர் கூறுகையில், இந்த செய்தியை நானும் படித்தேன். சினிமாவில் இதுமாதிரி செய்திகள் வருவது சகஜமாகி விட்டது. அதனால் அதை நான் கேர் பண்ணவில்லை. மேலும், இப்போது எனது ஆர்வம் இஞ்சி இடுப்பழகி படத்தின் மீதுதான் உள்ளது. திரைக்கு வரத்தயாராகி விட்ட அந்த படம் பார்ப்பதற்கு ஜாலியான கதையாக இருந்தாலும், அந்த கதைக்காக என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்தேன். அதனால் இந்த படத்திற்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதோடு, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அதனால் சில மீடியாக்கள் ஆர்யா தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளையும் இம்ப்ரஸ் பண்ணவாரே? உங்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்றும் கேட்கிறார்கள். ஆனால், ஆர்யா என்னிடம் ரொம்ப சகஜமாகவே பழகுகிறார். என்னை இம்ப்ரஸ் பண்ண அவர் எந்தவித முயற்சியும் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை என்கிறார் அனுஷ்கா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in