விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
இன்னும் காற்றுவாக்கில் இருக்கும் செய்திதான்.. ஆனால் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து இந்த செய்தி பரவியுள்ளதாக கூறப்படுகிறது. 1991ல் 'தளபதி' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார் அரவிந்த்சாமி. இத்தனைக்கும் அரவிந்தசாமிக்கு அதுதான் அறிமுகப்படம்.. அதைத்தொடர்ந்து சில வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் செல்வா இயக்கிய 'புதையல்' என்கிற படத்தில் இணைந்து நடித்தார்கள். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிளாப் ஆன படங்களின் பட்டியலில் இது இடம் பிடித்தது. இப்போது இவர்கள் இருவரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்கள் என்பதுதான் காற்றுவாக்கில் உலாவரும் செய்தி..
இவர்கள் இருவரையும் இணைக்க இருப்பவர் இயக்குனர் பாலா தானம். ஆம் சில தினங்களுக்கு முன் பாலா அறிவித்த மல்டி ஸ்டாரர் படத்தில் மம்முட்டியும் இணைய இருக்கிறாராம். மம்முட்டிக்கும் பாலாவுக்கும் எப்படி சிங்க் ஆகும் என்பது ஒருபக்கம், பாலா பெரும்பாலும் பிறமொழி நடிகர்களை வைத்து படம் இயக்குவதில்லை என்பது இன்னொரு பக்கம் என சந்தேகங்கள் இருந்தாலும் மம்முட்டியை முக்கியமான ரோலில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்கிறார்கள். இந்தப்படத்தில் ஆர்யா, விஷால், அதர்வா மற்றும் ராணா ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது.