'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் 'கத்தி'. இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்தது. பொதுவாக ஒரு படம் ஹிட்டானால் அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து விடுவார்கள். ஆனால், 'கத்தி' படம் வெளியாகி வெற்றி பெற்ற உடனேயே அந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சில முன்னணி தெலுங்கு நடிகர்களும் படத்தைப் பார்த்தார்கள். ஆனால், அதன் பின் யாரும் அந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லாமல் ஒதுங்கி விட்டார்கள்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 'கத்தி' படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகச் சொல்லப்பட்டது. அடுத்து சிரஞ்சீவியும் அந்த ரீமேக் யோசனையை கைவிட்டு விட்டார் என்றார்கள். தெலுங்கு ரீமேக்கில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் ஹிந்தியில் 'கத்தி' படம் ரீமேக் ஆவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரின் உதவியாளர் ஜெகன் படத்தை இயக்கப் போகிறாராம். முன்னணி நடிகரான அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க உள்ளார். 'துப்பாக்கி' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார்தான் நாயகனாக நடித்திருந்தார். மீண்டும் அந்தக் கூட்டணி தற்போது 'கத்தி' ரீமேக்கிலும் இணைகிறது.