மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டருக்கு பிறகு ஹாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் லெஜண்ட். காரணம் இது 1950களில் லண்டனை கலக்கிய ஒரு இரட்டை சகோதரர்களின் கதை. ஆங்கில எழுத்தாளர் ஜான் பியர்ஸன் எழுதிய நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இரட்டை சகோதரர்கள் கதை என்றால் இரட்டையாகள் எதிர்மறை குணம் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். இதில் இருவருமே ஒரே மாதிரியான குணாதிசயங்களை கொண்டவர்கள். இரட்டையர்கள் கதை என்றால் ஒரே நடிகர் இரண்டு வேடங்களிலும் நடிப்பார். ஆனால் இதில் ரொனால்ட் ரோனி க்ரே, மற்றும் ரிஜினால்ட் ரிக்கி க்ரே என்ற ஒரிஜினல் இரட்டை சகோதரர்களே நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர கிறிஸ்டோபர் எக்லஸ்டன், எமிலி ப்ரவ்சிங், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஏ நைட்ஸ் டேல், தி ஆர்டர் படங்களை இயக்கிய ப்ரைன் ஹெல்க்லேண்ட் இயக்கி உள்ளார்.
250 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் லண்டன் உள்ளிட்ட சில நாடுகளில் வெளியானது. விரைவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெளிவருகிறது. இந்தியாவில் பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் ஆங்கில பதிப்புடன் இந்தி, தமிழ், தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகிறது.