ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பாயும் புலி படத்தில் இறுதியாக நடித்த காஜல் அகர்வால் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார். மேலும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் சர்தார் கபார் சிங் படத்திலும் நடித்து வருகின்றார். முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்து வந்த காஜல் அகர்வால் தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். முன்னணி நடிகையாக இருந்து கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடுவது வளர்ச்சியை பாதிக்கும் என எண்ணிய காஜல் அகர்வால் முடிவை மாற்றக் காரணம் ஸ்ருதிஹாசன், தமன்னா ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாடி புகழோடு பெரும் தொகையை சம்பளமாக பெறுவதே ஆகும். இதனால் குத்தாட்டம் போட அணுகிய இயக்குனர்களிடம் முதலில் முடியாது என கூறிய காஜல் தற்போது தானே போன் போட்டு தனது மாற்றம் குறித்து கூறி வருகின்றாராம். ஆக விரைவில் காஜல் அகர்வாலை ஒரு குத்தாட்ட பாடலில் பார்க்கலாம்..