ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த வேதாளம் திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகின்றது. தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரைக்கு வந்த முதல் நாளே ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்துள்ளது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
வேதாளம் படத்தைப் பார்த்த ஜுனியர் என்.டி.ஆர் அண்ணன் தங்கை சென்டிமென்ட் மற்றும் அஜித்தின் அதிரடி நடிப்பு இரண்டையும் பாராட்டியுள்ளார். மேலும் சிவாவின் இயக்கமும் ஜுனியர் என்.டி.ஆரைக் கவர்ந்துள்ளதால் அவர் இப்படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாகக் கூறப்படுகின்றது. விஜய் நடித்த கத்தி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய விரும்பிய ஜுனியர் என்.டி.ஆர் அடுத்து வேதாளம் படத்தை குறி வைத்துள்ளார்.