டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா, அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் சொக்கடே சின்னிநயனா எனும் படத்தில் நடித்துள்ளார். சைகோ திரில்லர் படமான இப்படத்தில் நாகார்ஜுனா மற்றும் மனோத்தத்துவ மருத்துவர் என இரட்டை வேடங்களில் நாகார்ஜுனா நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், லாவண்யா திரிபதி, அனுஷயா,ஹம்சா நந்தினி என நான்கு நாயகிகளும் இப்படத்தில் நாகார்ஜுனவுடன் நடித்துள்ளனர். பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது வெளிவந்துள்ளது. ஜனவரி 15 ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் டிக்டேட்டர் திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரவுள்ளதால் நாகார்ஜுனா, பாலகிருஷ்ணாவுடன் மோதுவது உறுதியாகியுள்ளது. மேலும் ஜுனியர் என்.டி.ஆர் நடித்துள்ள நன்னுக்கு பிரேமதோ திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இதனால் பொங்கல் பண்டிகையை திரையில் கொண்டாட ரசிகர்கள் தயாராகி விட்டனர்.