‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் அதர்வா நாயகனாக நடித்துள்ள படம் ஈட்டி. இந்த படத்தை வெற்றிமாறனிடத்தில் உதவியாளராக பணியாற்றிய ரவி அரசு இயக்கியிருக்கிறார். தடகள போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் வருகிற 27-ந்தேதி தமிழகமெங்கிலும் சுமார் 350 தியேட்டர்களில் வெளியாகிறது. பாலாவின் பரதேசி படத்திற்காக தன்னை எப்படி மாற்றிக்கொண்டு நடித்தாரோ அதேபோன்று இந்த படத்திற்காக ஒரு தடகள வீரராக தனது பாடிலாங்குவேஜை பக்காவாக மாற்றி நடித்திருக்கிறார் அதர்வா. அதற்காக சில மாதங்களாக சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கும் மாறி நடித்திருக்கிறார்.
இதுபற்றி ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு கூறுகையில், இந்த ஈட்டி படத்தில் ஒரு ஷார்ப்பான இளைஞனாக அதர்வா நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து உள்வாங்கி நடித்தார். அந்தவகையில், இதுவரையில்லாத அளவுக்கு இந்த படத்தில் அவர் பெரிய ஸ்கோர் பண்ணியிருக்கிறார். அதனால் ஈட்டி படம் ரொம்ப பிரமாதமாக வந்திருக்கிறது. எனக்கு இது முதல் படம் எ ன்பதால், மிகப்பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருக்கிறேன். படம் நூறு சதவிகிதம் திருப்தியாக வந்திருக்கிறது. அதனால் தமிழக ரசிகர்களை ஈட்டி வெகுவாக கவரும் என்பது உறுதியாகி விட்டது.
மேலும், ஈட்டி படத்தைப்பார்த்த எனது குருநாதர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நாயகன் அதர்வா ஆகியோர் என்னை பாராட்டினார்கள். குறிப்பாக, டைரக்டர் வெற்றிமாறன் ஈட்டி படம் பற்றி கூறுகையில், படத்தின் மேக்கிங் பிரமாதமாக உள்ளது. கண்டிப்பாக படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று சொல்லி என்னை பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு பெரிய எனர்ஜியையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது என்கிறார் டைரக்டர் ரவி அரசு.