ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி : தி கன்குலூசன் படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அன்றே இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகளும் துவங்கும் என தெரிகிறது. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பிரபாஸ் இப்படத்திற்கென 10 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். ஆனால் படக்குழுவோ 190 நாட்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தில் நடிக்க டோலிவுட்,கோலிவுட் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தில் நடிக்கவிருக்கும் கலைஞர்கள், பணியாற்றவிருக்கும் தொழிநுட்ப கலைஞர்களின் பட்டியல் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் இப்படத்தின் பூஜை அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.