சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. தற்போது அவர் கைவசம் காஷ்மோரா, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதுவரை நடித்துள்ள படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோக்களை காதலிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா. இப்படி ரொமான்ஸ் பார்பாமென்ஸே அவர் அதிகமாக கொடுத்திருப்பதால் இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்கிறார்.
ஆனால் ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து மரத்தை சுற்றி டூயட் பாடிக்கொண்டிருக்க ஆசைப்படவில்லையாம். அதனால் தன்னிடம் கதை சொல்லும் டைரக்டர்களிடம், தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் காதல் கதைகளாக நடித்துவிட்டேன். அதனால் இனிமேல் என்னை கதைக்களத்திற்குள்ளும் கொண்டு வாருங்கள். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகமாக உள்ளது என்கிறாராம். மேலும், நான் 3 வயதில் இருந்தே நடித்து வருகிறேன். அதனால் எந்தமாதிரியான வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து விடக்கூடிய நடிப்பாற்றல் என்னிடம் உள்ளது என்று சொல்லி, தன்னை வெகுவாக கவர்ந்த சில கதாபாத்திரங்களையும் டைரக்டர்கள் முன்பு எடுத்து வைக்கிறாராம். ஸ்ரீதிவ்யாவின் இந்த ஆர்வம் சில டைரக்டர்களுக்கு அவரை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.