தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கபாலி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. ரஷ்யக் கலாச்சார மையத்தில் தொடங்கி விமானநிலையம் மற்றும் சாலிகிராமத்தில் போடப்பட்ட செட்டில் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகு மலேசியாவுக்கு பயணமானது 'கபாலி' படக்குழு. கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உள்ள மலாகா மாநிலத்தில் கபாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுவரை எத்தனையோ திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்திருக்கின்றன. அவற்றில் அமிதாப்பச்சன் நடித்த படங்களும் கூட அடக்கம்.
ஆனால், 'கபாலி' படத்தின் படப்பிடிப்பில் உள்ள ரஜினியைக் காண்பதற்கு அங்குள்ள மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சி, ஆரவாரம், வரவேற்பு, பரபரப்பை இதுவரை மலேஷியா கண்டதில்லை என்கிறார்கள். ரஜினியை பாதுகாக்க தனியார் நிறுவன ஊழியர்கள் அரண் அமைத்து நிற்க, படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதேமசயம், ரஜினி செல்லும் வழியெல்லாம் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடி விடுகிறது. அவர்களை ஏமாற்றாமல் திறந்த காரில் ரசிகர்களை வணங்கியபடி சென்று வருகிறார் ரஜினி. இன்னும் நான்கு நாட்களில் மலேசியா செட்யூல் முடிவடைகிறது.
கபாலி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வருகிற 23-ஆம் சென்னை திரும்புகிறார் ரஜினி. சென்னையில் சில நாட்கள் ஓய்வெடுத்தப் பிறகு மீண்டும் 'கபாலி' படப்பிடிப்புக்காக அமெரிக்கா பயணமாகவிருக்கிறார் ரஜினி. அதாவது ஜப்பானில் நடைபெறுவதாக இருந்த படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.