Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தூங்காவனம் போஸ்டரில் நித்யா மேனன் வந்தது எப்படி..?

18 நவ, 2015 - 17:44 IST
எழுத்தின் அளவு:
How-nithayamenon-comes-in-Thoongavanam-poster

கடந்த தீபாவளி தினத்தன்று கமலின் 'தூங்காவனம்' படம் கேரளாவிலும் வெளியானது.. அதற்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தபோது ஒன்றில் மட்டும் ஏதோ வித்தியாசம் தெரிவதை கண்டுபிடித்த ரசிகர் ஒருவர், அதை போட்டோ எடுத்துசென்று வீட்டில் வைத்து சோதித்துள்ளார். அந்த போஸ்டரில் கமல், பிரகாஷ்ராஜ், திரிஷா ஆகியோருடன் ஆஷா சரத்தின் படமும் இடம்பெற்றிருந்தது.. ஆனால் படத்தில் நடித்த ஆஷா சரத்தின் லுக்கிற்கும் உடைக்கும் இந்தப்போஸ்டரில் இருந்த போஸிற்கும் சம்பந்தமில்லை.


இன்னும் நுணுக்கமாக இணையத்தை கிளறியபோதுதான் அந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆஷா சரத்தின் உடல் நித்யா மேனனுக்கு சொந்தமானது என்பதும் தலைப்பகுதி மட்டும் ஆஷா சரத்தின் புகைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டு ஓட்டவைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. விசாரித்தால் விஷயம் அடேங்கப்பா என சொல்ல வைக்கிறது. இந்தப்படத்தை கேரளாவில் வெளியிட வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர் கூடவே வேதாளம் படமும் வெளியாவதால் ரசிகர்கள் கூட்டத்தை இழுப்பதற்காக ஒரு ஐடியா பண்ணினாராம்.


அந்தவிதமாக கேரளாவில் த்ரிஷயம் மூலம் பேமஸான ஆஷா சரத்தையும் போஸ்டர் டிசைனில் இணைத்து போட்டோஷாப்பில் டிசைன் பண்ணி தர சொல்லியுள்ளார். கூடவே ஆஷா சரத்தின் படம் கொஞ்சம் 'கிக்'காக இருக்கட்டும் என்றும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார். இது போதாதா..? ஆனால் ஆஷாவின் கிக்கான படத்திற்கு எங்கேபோவது..? அதனால் டிசைனர் நித்யா மேனனின் சூப்பர் போட்டோ ஒன்றை எடுத்து அதில் ஆஷாவின் தலையை பிக்ஸ் பண்ணிவிட்டார்.. கமல் படத்துக்கு ஆஷா சரத்தை வைத்தா கூட்டம் கூட்டணும் என மற்ற விநியோகஸ்தர்கள் தலையில் அடித்துக்கொண்டார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in