பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சித்தார்த் மல்ஹோத்ராவும், ஆலியா பட்டும் பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் ஜோடியென எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர்களுக்குள் தற்போது ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. காதல் என்றாலே மோதல் ஏற்படுவது சகஜம் என்றாலும், இது வேற மாதிரி மோதல்.
அக்ஷய் குமாரின் வீட்டில் பாலிவுட் பிரபலங்களுக்கு தீபாவளி விருந்து அளிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ள சித்தார்த்திற்கும், ஆலியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள புறப்பட்ட ஆலியா பட் அணிந்த ஆடை நன்றாக இல்லை, வேறு ஆடையை அணிந்து வா என்று ஆணையிட்டுள்ளார் சித்தார்த். ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன் வீட்டு விழாவில் இதே ஆடையை அணிந்து படும் அவஸ்த்தை பட்டாய், என ஆலியாவிடம் கூறியுள்ளார்.
கோபம் கொண்ட ஆலியா தீபாவளி பார்ட்டியை புறக்கணித்துள்ளார். இந்த பஞ்சாயத்தை யார் தீர்த்து வைப்பார்களோ!