‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சாவர்யா படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக அறிமுகமானவர் சோனம் கபூர். தனுஷுடன் ராஞ்சனாவில் நடித்து பாலிவுட்டில் முன்னணி கதாநாயகிகளுக்கு போட்டியாக மாறினார். தற்போது தீபாவளி விருந்தாக வெளியான சல்மான் கான் படமான பிரேம் ரத்தன் தான் பாயோ படத்திலும் இவரே கதாநாயகி. இவர் நடித்து வெளியான அத்தனை படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனையை படைத்து வரும் நிலையில் இந்த நவம்பர் மாத பிலிம்ஃபேர் அட்டை பட இளவரசியும் இவர் தான். இதற்காக, படு கவர்ச்சியாக அவர் கொடுத்திருக்கும் போஸ் இளைஞர்களை குதூகல படுத்தியுள்ளது.
அம்மணி காட்டில் அடைமழை என்றே சொல்லலாம், பிரேம் ரத்தன் தான் பாயோ 120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைகளை கடந்து போவதால், மேலும் பல பட வாய்ப்புகள் தானே வந்து கதவை தட்டுதாம். ஆனால், சோனம் கபூரின் இலக்கு ஷாரூக்கான், ஆமிர்கான், டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியோ ஆகியோரிடம் நடிக்க வேண்டும் என்று திரும்பியுள்ளதாம். பாலிவுட்டில் தற்போது உச்சத்தில் உள்ள இவரது கனவு விரைவில் நிறைவேறுமா?