Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.430 டிக்கெட்டில் சென்னையில் ஸ்பெக்டர்!

18 நவ, 2015 - 15:45 IST
எழுத்தின் அளவு:
Rs.430-ticket-for-James-bonds-spectre-movie

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆகும் ஸ்பெக்டர் பட டிக்கெட்டின் விலை 430 ரூபாயா? கேட்டு ஷாக் ஆகாதிங்க, இது எல்லா திரையரங்கிலும் இல்லை. காசுக்கேத்த தோசை நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம். ஆம், சென்னையில் முதல்முறையாக ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வேளச்சேரி ஜாஸ் சினிமாஸில் வருகின்ற 20ம் தேதி முதல் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படங்களை திரையிட இருக்கின்றனர்.


அமெரிக்காவின் ஐமேக்ஸ் தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகிவிட்டன. சென்னையில், வடபழனி விஜயமாலிலும், வேளச்சேரி பீனிக்ஸ் மாலிலும் ஐமேக்ஸ் திரையரங்குகள் நிறுவப்பட்டன. விஜயமால் நிறைய பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதால், தற்போது ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தை சென்னையில் வெளியிடும் பெருமை ஜாஸ் சினிமாஸ்க்கு கிடைத்துள்ளது. வழக்கத்தை விட அதிகமான திரை மற்றும் அசரவைக்கும் துல்லியமான ஒலி என்று சினிமாவை ரசிப்பவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் பரவசத்தை அளிக்கும் என்று உறுதி கூறுகின்றனர்.


உலகெங்கும் வெளியாகி வெற்றிவாகை சூடிய ஸ்பெக்டர் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. இந்தப் படத்தை சென்னை ஜாஸ் மாலில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் முதன்முறையாக திரையிடவிருக்கின்றனர். ஜேம்ஸ்பாண்ட் படத்தின் அதிரடியுடன், ஐமேக்ஸ் தொழில்நுட்பமும் சேர்வதால் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


ஆனால், அதிர்ச்சியூட்டும் விஷயம் ஒன்றுதான் திரையரங்கின் டிக்கட் விலை. ஒரு டிக்கெட்டின் விலை 360 ரூபாய். 3டி தொழில்நுட்பம் என்றால் கண்ணாடிக்கு இன்னும் 30 ரூபாய் அதிகம். இதைவிடவும் நீங்கள் இருந்த இடத்திலேயே முன்பதிவு செய்யக்கூடிய இணையதளத்தில் டிக்கெட்டின் விலை 430 ரூபாய் ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in