பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஸ்ரீமந்துடு, தமிழில் நடிகர் அஜித்துடன் வேதாளம் என வெற்றிப் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வேகமாக வளர்ந்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் அடுத்து தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மலையாள பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமான பிரேமம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கவுள்ளார். மூன்று நாயகிகள் கொண்ட இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தின் வாயிலாக நாக சைதன்யாவுடன் ஸ்ருதிஹாசன் முதன் முறையாக ஜோடி சேரவுள்ளார். பிரேமம் படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். மஜ்னு என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தை சித்தாரா எண்டர்டையின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குனர் சண்டூ மொண்டெடி இயக்கவிருக்கும் இப்படத்தின் பூஜை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகின்றது.