ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு சில பெயர்களை தமிழில் எழுதுவதற்கும், உச்சரிப்பதற்கும், ஆங்கிலத்தில் எழுதுவதற்கும், உச்சரிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அதிலும் சில பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பலரும் பல எழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள். அப்படி ஒரு கவலையில் ஸ்ருதிஹாசன் உள்ளார். அவருடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது பலரும் பலவிதமாக எழுதுவதைக் குறித்து ஸ்ருதிஹாசனே வெறுப்பாகிவிட்டார் போலிருக்கிறது. 'என் பெயரை அனைவரும் சரியாக எழுதுவார்கள் என நினைக்கிறேன். என் பெயர் ஷ்ருதிஹாசன். ஷிரிதி, ஸ்ட்ருதி, சுருதி, சுரூதி, ஹாசன், ஸ்ருதி ஹுசைன் எல்லாம் கிடையாது,” என கொஞ்சம் வெறுப்புடனே ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
தமிழில் எழுதுபவர்கள் ஸ்ருதிஹாசன், ஷ்ருதிஹாசன் என்றுதான் எழுதுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்தான் எப்படி எப்படியோ எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் தன் பெயரை எழுதுபவர்களைப் பற்றிச் சொல்லிவிட்டார் ஸ்ருதி. தமிழில் ஸ்ருதிஹாசனா இல்லை ஷ்ருதிஹாசனா எப்படி எழுத வேண்டும் என்று அதையும் சொல்லிவிடுங்கள் ஸ்ருதிஹாசன் என்கிற ஷ்ருதிஹாசன்.