இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கி வரும் அ..ஆ எனும் தெலுங்கு படத்தில் நடிகர் நிதின் மற்றும் நடிகை சமந்தா நடித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணா ஹரிக்கா அன்ட் ஹாசினி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நடிகர் நாக சைதன்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தை தயாரிப்பாளர் டி.வி.வி.தன்னய்யா தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் சஹசம் சுவாசக சாகிபோ என்ற பெயரில் உருவாகி வருகின்றது. இறுதி கட்டத்தை எட்டி விட்ட இப்படத்திற்கு பின்னர் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா நடிக்கவுள்ளார். இவ்விரு படங்களை முடித்த பின்னர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாக சைதன்யா நடிப்பார் என தெரிகிறது.