ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹீரோயின்கள் போலவே ஹீரோக்களுக்கும் பேயாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. சாட்டை படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ நிறுவனம் தற்போது சவுகார்பேட்டை என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் இந்த மாத இறுதியில் வெளிவருகிறது. வி.சி.வடிவுடையான் என்பவர் இயக்குகிறார். இதில் ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் பேயாக நடிக்கிறார்கள்.
அடுத்து இதே நிறுவனம் பொட்டு என்ற படத்தை தயாரிக்கிறது. இதனையும் வி.சி.வடிவுடையானே இயக்குகிறார். இதுவும் சவுகார் பேட்டை மாதிரி பேய் படம்தான். இதில் பரத் பேயாகவும், இன்னொரு முக்கிய கேரக்டரிலுமாக இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. சுமன், கருணாஸ், சரவணன், நாசர், ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அம்ரீஷ் இசை அமைக்கிறார். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.