ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரேமம் புகழ் சாய் பல்லவி அடுத்து எந்த படத்தில் யாருடன் ஜோடி சேர போகிறார், என்ற குழப்பத்தில் இருந்த கேரள ரசிகர்களுக்கு விடை கிடைத்து விட்டது. ஆம், துல்கர் சல்மானின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்திருக்கிறார் சாய் பல்லவி. சமீர் தாஹிர் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராகிய சமீர் தாஹிர் ஏற்கனவே துல்கரை வைத்து நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி படத்தை இயக்கியவர். ஆனால், அந்த படம் சுமாரான வெற்றியைத் தான் அடைந்தது.
மீண்டும் இவர்கள் இணையும் படமாக இந்த படம் உருவாகிறது. இது ஒரு காதல் த்ரில்லர் படம் என்று இயக்குனர் கூறினார். மேலும் படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தில் தமிழ் பேசும் ஆசிரியையாக வந்து அனைவரையும் கொள்ளைக் கொண்ட சாய் பல்லவி இந்த படத்தில் மாடர்ன் கேர்ள் ஆக வலம் வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.