மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் தமிழுக்கு வந்த மனீஷா கொய்ராலா, அதன்பிறகு ஷங்கரின் இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் தமிழ், இந்தியில் தயாரான உயிரே, கமலுடன் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த அவர், தற்போது தமிழ், கன்னடத்தில் உருவாகி வரும் ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்து வருகிறார். அர்ஜூன், ஷாம் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருபவர், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், மனீஷா கொய்ராலா படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது தன்னுடன் மேக்கப்மேன், ஹேர்டிரஸ்ஸர், காஸ்டியூமர் உள்பட பல பர்சனல் உதவியாளர்களை முன்பு மாதிரி இப்போது வைத்துக்கொள்வதில்லை. தற்போது தான் கேரக்டர் வேடங்களில் மட்டுமே நடிப்பதால் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் நபர்கள் மூலமே மேக்கப், காஸ்டியூம் என்று தன்னை அழகுப்படுத்திக்கொள்கிறார். ஆனபோதும், தனக்கென ஒரேயொரு பெண்ணை மட்டும் அவர் எப்போதும் கூடவே அழைத்து வருகிறார். அவரை தன்னுடனேயே ஹோட்டலில் ஒரே அறையில் தங்க வைத்துக்கொள்கிறார். யார் அந்த பெண்? என்று விசாரித்தால், அந்த பெண்தான் மனீஷா கொய்ராலாவின் தற்போதைய பாடிகார்டாம். அவர் மனீஷா, கேமரா முன்பு நடிக்கும்போது தவிர மற்ற நேரங்களில் எங்கு சென்றாலும் அவரையே நிழல் போல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். நடிகையான எனக்கு ஒரு ஆணை விட பெண்தான் சரியான பாதுகாவலராக இருக்க முடியும் என்றும் அந்த பெண் குறித்து தன்னிடம் விசாரிப்பவர்களிடம் கூறுகிறாராம் மனீஷா கொய்ராலா.