'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் |
1992ல் மலையாளத்தில் வெளியான படம் தான் 'யோதா'. மோகன்லால், மதுபாலா நடித்த இந்தப்படத்தை, இயக்குனர் சங்கீத்சிவன் இயக்கியிருந்தார். தனது இசைப்பயணத்தில் இதுநாள் வரை இந்த ஒரே ஒரு மலையாளப்படத்திற்கு மட்டும்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பது படத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு. ஆனால் நாம் சொல்ல வந்த விஷயம் இந்தப்படத்தில் புத்தமத துறவிகள் வம்ச வாரிசாக, குட்டிப்பையனாக நடித்த சித்தார்த் லாமா என்பவரை பற்றித்தான். படம் வெளியானபோது யாரந்த சுட்டிப்பையன் என மலையாளிகள் அனைவரின் மனதிலும் இடம்பிடித்த, நேபாளத்தை சேர்ந்த சித்தார்த் லாமா இப்போது வளர்ந்து வாலிபனாகி, திருமணம் செய்துகொண்டு ஒன்றரை வயதுள்ள ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளார்.
தற்போது 23 வருடங்கள் கழித்து மலையாளத்தில் அவருக்கு 'எடவாபதி' என்கிற படத்தில் புத்தமத துறவியாக நடிக்க அழைப்பு வந்ததால் கேரளா வந்துள்ளார். 'யோதா' படத்திற்குப்பின் மோகன்லாலை பல வருடங்களாக சந்திக்காமல் இருந்த, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கேரளா வந்து மோகன்லாலை சந்தித்தாராம். குட்டிப்பையனாக தன்னுடன் படத்தில் நடித்த அந்து துறுதுறு சிறுவன் இருபது வருடம் கழித்து தன் கண் முன்னே வாலிபனாக நிற்பதை கண்ட மோகன்லால், அளவில்லாத மகிழ்ச்சியுடன் சித்தார்த் லாமாவை கட்டித்தழுவினாராம். அதன்பின் அவரிடம் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பழைய நினைவுகளையும், சித்தார்த் லாமாவின் தற்போதைய குடும்ப நிகழ்வுகளையும் விசாரித்து அறிந்துகொண்டாராம்.
சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டபோது மோகன்லால் உடனடியாக சித்தார்த் லாமாவுக்கு போன் செய்து அவரும் அவரது குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதை விசாரித்து உறுதி செய்தாராம். அதுமட்டுமல்ல, கடந்தமுறை கேரளா வந்தபோது 'யோதா' பட இயக்குனர் சங்கீத் சிவனை சந்தித்தாராம் சித்தார்த். அப்போது 'யோதா' படத்தின் இரண்டாம் பாகத்தை தயார் செய்துகொண்டிருப்பதாக சங்கீத் சிவன் கூறியுள்ளாராம். அதனால் மோகன்லாலுடன் மீண்டும் நடிக்கும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாராம் சித்தார்த் லாமா.