தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அக்மார்க் ஆங்கிலேயே பெண்ணான எமி இப்போது வெள்ளை தமிழச்சி. மதராசபட்டினம் மூலம் தமிழக்கு வந்தவர் இப்போது மதாராச பட்டினத்திலேய வீடு வாங்கி தங்குகிற அளவிற்கு பிசியாகி விட்டார். ஷங்கர் இயக்கிய ஐ படம் அவருக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறது.
இடையில் பிரபுதேவா இயக்கிய சிங் இஸ் பிளிங் இந்திப் படத்தில் நடித்தார். இனி அவர் தமிழ் பக்கம் திரும்ப மாட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அந்தப் படம் சரியாக போகாததால் மீண்டும் தமிழுக்கே வந்த எமி இனி தமிழை விட்டு போவதாக இல்லை. காரணம் 2016 டிசம்பர் வரை அவருக்கு தமிழ் படங்கள் இருக்கிறது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தங்கமகன் படத்தில் நடித்து முடித்து விட்டார், உதயநிதி தயாரித்து நடிக்கும் கெத்து படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து விஜய் நடிக்க அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஜீவா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோடன் தலா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு எந்திரன் 2 படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். எனவே இனி எமி சென்னைவாசிதான்.