ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிப்பில் ப்ரூஸ் லீ படம் இறுதியாக வெளிவந்தது. இப்படத்திற்கு பின்னர் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகிக்கான தேர்வு இன்னும் முடிந்தபாடில்லை.. அனேகன் நாயகி அமைரா, நடிகை காஜல் அகர்வால், நடிகை சமந்தா ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் ஸ்ரீமந்துடு எனும் சூப்பர் ஹிட் படத்தில் இறுதியாக நடித்த ஸ்ருதிஹாசன் அதன் பின்னர் வேறு எந்த தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. ஸ்ருதிஹாசன் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ராம் சரணுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த யெவடு திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணையவுள்ளது.