ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சான் ஆன்ட்ரியாஸ், பார்ஸ்ட் அன்ட் ப்யூரியஸ், ஜார்னி 2 போன்ற படங்களில் கலக்கிய ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் டுவைன் ஜான்சன். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவரும், அவர் மனைவியும் உள்ள படத்தினை வெளியிட்டுள்ளார், கூடவே அவர் மனைவி கருவுற்று இருப்பதையும், விரைவில் எங்களுக்கு மகளே பிறப்பால் என்றும் அந்த புகைப்படத்திற்கு கீழே செய்தி வெளியிட்டுள்ளார்.
“எனது மனைவி மிகவும் வலிமையானவள், எனக்கு மீண்டும் ஒரு வலிமையான பெண் தேவைப்படுகிறாள். நிச்சயம் இந்த குழந்தை பெண் தான். எனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும்” என்றும் அவர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு ஏற்கனவே சைமோன் என்கிற 14 வயது மகளும் இருக்கிறாள். அவள் அவரது முதல் மனைவியான டேன்சி கார்சியாவிற்கு பிறந்தவள் என்பதும் குறிப்பிடத்தக்கது.