ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகமும், இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும் இணைந்து சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழாவை நடத்துகிறது. வருகிற 19ந் தேதி தொடங்கி 22ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் புகழ்பெற்ற 6 ஜப்பானிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
19ந் தேதி எம்.எம்.தியேட்டரில் நடக்கும் துவக்க விழாவில் ஜப்பான் தூதர் சீஜி பாபா கலந்து கொண்டு பட விழாவை துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ராஜாராம். நடிகை ஸ்ரீப்ரியா, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொள்வார்கள். முதல் நாளும், கடைசி நாளும் தலா ஒரு படமும் மற்ற நாட்களில் 2 படங்களும் எம்.எம்.தியேட்டரிலேயே திரையிடப்படுகிறது.