தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் சித்தார்த், தமிழிலும் முன்னணி நடிகராக வேண்டும் என தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். தற்போது சித்தார்த் நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படமான ஜில் ஜங் ஜக் எனும் படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் தீரஜ் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளது. இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகர் அல்லரி நரேஷ் மோகன் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள மாமா மன்ச்சு அல்லுடு கன்ச்சு எனும் திரைப்படமும், நடிகர் கோபிசந்த் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள சௌக்கியம் எனும் திரைப்படமும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.