ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சக்கரகட்டி சாந்தனு அதன்பிறகு சுப்ரமணியபுரம், களவாணி ஆகிய படங்களில் நடிக்க வேண்டியவர். ஆனால் அந்த கதைகளை கேட்டு விட்டு அவரது தந்தையான கே.பாக்யராஜ் கதை பிடிக்கவில்லை என்று தவிர்த்து விட்டார். ஆனால் அந்த படங்கள் சூப்பர் ஹிட்டாகின. பின்னர் சாந்தனு, சித்து ப்ளஸ்-2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி என பல படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் சாந்தனு, நடிப்பில் வாய்மை, அமளிதுமளி என்ற இரண்டு படங்கள் வெளிவரவேண்டியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை தொகுப்பாளினி கீர்த்தியை திருமணம் செய்து கொண்ட சாந்தனு, புதிய படங்கள் கமிட்டாகாத நிலையில், தனது வீட்டு மாடியிலேயே ஒரு பியூட்டி பார்லர் திறந்துள்ளார். அதை பேஷன் டிசைனரான அவரது மனைவி கீர்த்தி கவனித்துக்கொள்கிறார். அவருக்கு உதவியாக இருந்து வரும் சாந்தனு, மீண்டும் சினிமாவில் களமிறங்கயிருப்பவர் சமீபத்தில் ஒரு கதை கேட்டு ஓகே செய்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் அட்வான்ஸ் கைமாறியதும், அதுபற்றிய அறிவிப்புகள் வெளிவர உள்ளதாம். மேலும், தனது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் அந்த படத்தில் மார்க்கெட்டில் இருக்கும் சில கமர்சியல் நடிகர் நடிகைகளையும் நடிக்க வைக்குமாறு அப்பட நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளாராம் சாந்தனு.