'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
முத்தையா இயக்கிய குட்டிப்புலி, கொம்பன் படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன். இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் செண்டி மென்ட் காரணமாக அடுத்து விஷாலை வைத்து தான் இயக்கும் மருது படத்திலும் லட்சுமிமேனனையே நடிக்க வைக்க முத்தையா விரும்புவதாக செய்திகள் வெளியானது. ஆனால், பாண்டியநாடு படத்திற்கு பிறகு தனக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்த நான் சிகப்பு மனிதன் படம் ஓடாததால் மீண்டும் அவரை தனக்கு ஜோடியாக்க விஷால் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின. மாறாக, ஸ்ரீதிவ்யா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
அதோடு, அவர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக மிருதன் படத்தில் நடித்து வந்தபோதும், வேதாளம் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்து வந்ததால் இனிமேல் அவரது மார்க்கெட் சரிந்து விடும் என்று சில டைரக்டர்கள்கூட லட்சுமிமேனனை புக் பண்ண தயங்கி வந்தனர். ஆனால் வேதாளம் படம் வெளியான பிறகு இந்த நிலை மாறி விட்டது. விஷால் படத்தில் லட்சுமிமேனனே நடிக்கயிருப்பதாக இப்போது புதிய செய்தி வெளியாகியிருக்கிறது. அதோடு, வேதாளம் படத்தில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை விட லட்சுமிமேனனின் நடிப்பே பேசப்பட்டு வருவதாலும், அவருக்கு மருது பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆக, லட்சுமிமேனன் நடித்தால் படங்கள் வெற்றி பெறும் என்கிற செண்டிமென்ட் தொடருவதால் மேலும் சில படங்களும் அவர் பக்கம் திரும்பி நிற்கின்றன.