ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் நடித்தார். அந்த படம் அவருக்கு ஹிட்டாக அமைந்தது. அதனால், இப்போது மலையாளத்தில் ஹிட்டான கதைகளை தமிழில் இயக்குவதில் அங்குள்ள முன்னணி டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ''பாஸ்கர் தி ராஸ்கல்'' படத்தையும் தமிழில் ரீமேக் செய்யும் முயற்சிகள் சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், பாபநாசம் படத்தில் கமல் நடித்ததைப் போன்று ''பாஸ்கர் தி ராஸ்கல்'' படத்தில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாக முன்பு கூறப்பட்டது. ஆனால் கபாலிக்கு பிறகு எந்திரன்-2வில் நடிக்கும் ரஜினி நோ சொல்லிவிட்டதாகவும், அதனால் இப்போது அந்த கதை அஜீத் பக்கம் திரும்பியிருப்பதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், வேதாளம் திரையிட்ட இடமெல்லாம் வசூலித்துக்கொண்டிருப்பதால் அடுத்தபடியாகவும் வேதாளம் போன்றொரு மாஸ் கதையில்தான் அஜீத் நடிக்கயிருப்பதாக அவர்தரப்பில் இருந்து செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதனால் ''பாஸ்கர் தி ராஸ்கல்'' படத்தில் மம்மூட்டி நடித்தது போன்று 2 பசங்களுக்கு அப்பாவாகவெல்லாம் அஜீத் நடிக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.