இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் மலையாள நடிகை லேனா. அவ்வளவு ஏன் பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்தது முதல் துல்கர் சல்மானுக்கு கூட அம்மாவாக நடித்துவிட்டார். துல்கருக்கு அம்மாவாக நடித்த லேனாவுக்கு இந்தியில், அவரது சின்னவயது கனவு நாயகனாக இருந்த அக்சய் குமாருடன் 'ஏர்லிப்ட்' என்கிற இந்திப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ஒருபக்கம் வருத்தம்.. ஒருபக்கம் சந்தோசம் என கலவையான உணர்ச்சிகளுடன் இருக்கிறார் லேனா.
மலையாள இயக்குனர் ராஜ்கிருஷ்ண மேனன் இயக்கும் படம் என்பதால் அக்சயுடன் நடிக்கும் இந்தி வாய்ப்பு எளிதாக கைகூடிவிட்டதில் அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அவரைவிட வயது குறைவான தன்னை அவருக்கு அம்மா மாதிரியான வயதான கேரக்டரில் நடிக்கவைத்து விட்டார்கள் என்பதில் வருத்தம் தானாம் கடந்த சில நாட்களாகவே ராஜஸ்தானில் நடைபெற்ற இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட லேனாவை கடும் வெயில் வாட்டி வதக்கி விட்டதாம். தொண்ணூறுகளில் கல்ப் நாடுகள் மீது நடைபெற்ற போரின் போது, குவைத்தில் இருந்து அகதியாக தாயகம் திரும்பும் இவரது கேரக்டர் மலையாளி என்பதால் இவரது வசனத்தையும் மலையாளத்திலேயே பேசச்சொல்லி விட்டார்களாம்.