வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
போதும்.. மலையாள சினிமாவுக்கு இந்த ஆசுவாசம் போதும்... இனி தனது மார்க்கெட்டையும் தரத்தையும் தானாகவே அது பிக்கப் பண்ணிக்கொள்ளும்.. அந்த நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக விதைத்துள்ளது பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் அதிரடியான வெற்றி.. இன்று 60வது நாளை தொட்டும் கூட, கூட்டம் குறையாமல் படம் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றால் இதுதானே மலையாள சினிமாவுக்கு உற்சாக டானிக்காக இருக்க முடியும். இதுநாள் வரை இந்தப்படத்தின் வசூல் 36 கோடியை தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகள் சொல்கின்றன.
மக்கள் அனைவருமே அறிந்த பிரபலமான இருவரின் (காஞ்சனமாலா - மொய்தீன்) காதலை எந்த வித மிகைப்பூச்சும் இல்லாமல் உள்ளது உள்ளபடி சொன்னதுதான் வெற்றிக்கு முதல் படி.. இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப்படத்திற்காக ஏழு வருடங்கள் தன்னை வருத்திக்கொண்டு தந்த கடின உழைப்பு இரண்டாவது படி.. மொய்தீன்-காஞ்சனமாலாவாக திரையில் தோன்றி ரசிகர்களை கட்டிப்போட்ட பிருத்விராஜ்-பார்வதியின் அபார நடிப்பு வெற்றிக்கான மூன்றாவது படியாக அமைந்தது.. இப்படிப்பட்ட படத்தை மலையாளிகள் ஒதுக்கியிருந்தால் தான் அது ஆச்சர்யம். போகிறபோக்கை பார்த்தால் இந்தப்படம் சதம் அடித்துவிட்டுத்தான் ஓயும் என்றே தெரிகிறது.