ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வடிவேலு பேசிய புகழ்பெற்ற காமெடி டயலாக்குகளும், ரஜினியின் பழைய படத்தின் தலைப்புகளும்தான் இப்போது அதிக படங்களுக்கு வைக்கப்படுகிறது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி டயலாக்குகளான வருத்தப்படாத வாலிபர் சங்கம், நானும் ரவுடிதான், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா உள்பட நிறைய டயலாக்குகள் தலைப்புகளாக படங்களாவும் வெளிவந்து விட்டது. தற்போது அண்டாவ காணோம், கிணத்த காணோம். கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க, சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும், ஜிங் ஜங் ஜக், உள்பட பல டயலாக்குகள் டைட்டிலாகி படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய வசனங்கள் படங்களின் டைட்டிலாவது குறித்து வடிவேலு கூறியிருப்பதாவது: நான் இப்போது சினிமாவில் அதிகமாக நடிக்காவிட்டாலும் எனது காமெடிகள்தான் டி.வியில் தினமும் ஒளிபரப்பாகிறது. அதை தொடர்ந்து பார்த்து மகிழும் மக்களுக்கு நான் பேசிய ஒவ்வொரு வசனமும் நன்றாக தெரியும். வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைக்கும் என் டயலாக்குகளை பயன்படுத்துகிறார்கள்.
இதனால் நான் பேசிய அனைத்து காமெடி டயலாக்குகளையும் பதிவுசெய்து விட்டு அதனை விற்பனை செய்கிறார்கள். அதை ஒரு வியாபாரமாகவே மாற்றி விட்டார்கள். அதையும் சினிமாவில் முக்கியமாக இருக்கிற சிலர்தான் செய்வதாக சொல்கிறார்கள். என் நண்பர்கள் பலருமே என் டயலாக்குகளை காசு கொடுத்து வாங்கித்தான் தங்கள் படங்களுக்கு வைக்கிறார்கள். தலைப்பு வைக்கிறதுக்காக என் டயலாக்கை பயன்படுத்தும்போது யாரும் என்னிடம் அனுமதி கேட்பதில்லை. சிலர் மட்டும் வைத்து விட்டு அண்ணே இப்படி வைத்திருக்கோம்னு தகவல் சொல்வாங்க. என்கிறார் வடிவேலு.