பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு திரை உலகின் பிரபல எழுத்தாளரான ராஜசிம்ஹாக இயக்குனராக மாறவிருக்கும் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஜடூகடு படப் புகழ் நடிகை சொனாரிக்கா நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் சொனாரிக்காவிற்கு பதில் நடிகை நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இயக்குனர் ராஜசிம்ஹா நித்யா மேனனைச் சந்தித்து இப்படத்தின் கதையைக் கூறியுள்ளார். நித்யா மேனனும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஒக்க அம்மாயி தப்பா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் அஜி ரெட்டி தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் மிக்கி ஜெ மேயர் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். பூஜை முடிந்து இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் ஐதரபாத்தில் நடைபெறுகின்றது.