'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
தெலுங்கு திரை உலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் தமிழில் ட்ப் செய்யப்படும் தெலுங்கு படங்களில் மட்டுமல்லாது, மொழி போன்ற நேரடி தமிழ் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அண்மை காலமாக இவரது நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. S/O சத்யமூர்த்தி, தோசெய், ப்ரூஸ்லீ போன்ற படங்களில் இவரது நகைச்சுவை சொல்லிக் கொள்ளும் வகையில் அவருக்கு கை கொடுக்கவில்லை. இப்படங்களின் தோல்வி பிரம்மானந்ததிற்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவிடாமல் செய்து விட்டதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது. மேலும் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா நடித்து வரும் டிக்டேட்டர் படத்திலிருந்து பிரம்மானந்தம் நீக்கப்பட்டதற்கும் இதுவே காரணம் என்றும் கூறப்படுகின்றது. தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த அகில் படத்திலும் பிரம்மானந்தம் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இதனால் இவரது பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.