ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரஷாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சினிமாவுக்கு அறிமுகமானவர் த்ரிஷா. அதையடுத்து 2002-ல் சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் அவர் கதாநாயகியாகி விட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பரவலாக நடித்து வந்த த்ரிஷாவின் மார்க்கெட் இப்போதுவரை தொய்வில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதோடு, இதற்கு முன்பு பெரும்பாலும் மரத்தை சுற்றியே டூயட் பாடிக்கொண்டிருந்த அவர், தற்போது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், கமலுடன் தூங்காவனம் படத்தில் சிஐடி போலீசாக நடித்திருப்பவர் அடுத்தபடியாக அரண்மனை-2, நாயகி உள்பட சில படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தனது 50வது படமாக தீபாவளி அன்று வெளியாகியுள்ள தூங்காவனம் படத்தில் வித்தியாசமான ஆக்சன் ரோலில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதுவும் அவருக்கும், கமலுக்கும் ஒரு அதிரடி சண்டை காட்சியும் இடம்பெற்றுள்ளது. கமலுக்கு சண்டை போடுவது புதிதில்லை என்றாலும், த்ரிஷாவுக்கு ரொம்ப புதுசு. அதோடு, அவரது ஆக்சன் நடிப்பைப்பார்த்த பல சினிமா நடிகர் நடிகைகளும் அவரை தொடர்பு கொண்டு வெகுவாக புகழ்ந்து தள்ளி வருகிறார்களாம். அதோடு, த்ரிஷாவின் நெருக்கமான நண்பர்கள், அவர் 50 வது படத்தில் நடித்திருப்பதால் பார்ட்டி கொடுக்க வேண்டும் என்றும் த்ரிஷாவை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால் விரைவில் தனது சினிமா நண்பர்களுடன் தான் அரை சதமடித்ததை த்ரிஷா கொண்டாடி மகிழ்வார் என்று தெரிகிறது.