தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தீபாவளிக்கு அஜித் நடித்த 'வேதாளம்' படம் வெளிவந்ததை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தை விட 'வேதாளம்' கொண்டாட்டத்தைத்தான் அதிகம் கொண்டாடினார்கள். தமிழ்நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அவர்களின் சொந்த செலவிலேயே திரையரங்குகளை அலங்கரிப்பது, பேனர்கள் வைப்பது என பல விஷயங்களைச் செய்து தியேட்டர்களை திருவிழாக் கோலம் ஆக்கினார்கள்.
கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்களின் வீடியோக்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தது. பொதுவாக ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிப்பதை அவர்களது சொந்த செலவில் செய்ய மாட்டார்கள். குறிப்பிட்ட நடிகர்தான் ரசிகர் மன்றத்திற்கு பணம் கொடுத்து அனைத்தையும் செய்ய வைப்பார். ஆனால், அஜித் ரசிகர்கள் அவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டு இப்படிச் செய்வது ஆச்சரியமான ஒன்று. அதிலும் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது.
ரசிகர்களின் அளவு கடந்த அன்புக்கும், பாசத்திற்கும் அஜித் என்ன செய்யப் போகிறார். அவர்களது ரசிகர்களே அதை எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அஜித்தை ஒரு முறையாவது நேரில் பார்த்து அவரை வாழ்த்த வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள். அதைக் கூட அஜித் செய்வதில்லை என்ற வருத்தம் அவர்களிடம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.