இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு தீபாவளியை தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை செலவிட விரும்பும் மகேஷ் பாபு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலாவிற்கு அமெரிக்கா சென்று அண்மையில் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தீபாவளிக்கு விலை உயர்ந்த புதிய ரக கார் ஒன்றை வாங்கி தனது குடும்பத்தினருக்கு மகேஷ் பாபு பரிசளித்துள்ளார். காரின் முன்னால் மகேஷ்பாபு தனது மகன் கௌதம் கிருஷ்ணா மற்றும் மகள் சித்தாராவுடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மகேஷ்பாபுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் மகேஷ் பாபு தற்போது பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வருகின்றார்.