பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி என ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்த ஆர்.கே., மூன்றாவதாக அவர் இயக்கத்தில் நடித்துள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ். ரயில் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் அதிரடி போலீசாக நடிக்கிறார் ஆர்.கே., ஆக்சன் படமாக இருந்தாலும், இந்த படத்தில் சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர்.
அதேபோல், இந்த படத்தில் நீத்து சந்திரா நாயகியாக இரண்டு வேடங்களில் நடித்தபோதும், இனியா, கோமல் சர்மா, சுஜா என மேலும் மூன்று நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் கோமல் சர்மாவுக்கு ஒரு அதிரடியான தீவிரவாத பெண் வேடமாம். கதையில் முக்கிய திருப்புமுனையை கொடுக்கக்கூடிய கேரக்டர் என்பதால், இந்த படத்திற்கு பிறகு தமிழில் நான் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்கிறார் கோமல் சர்மா.