Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கதைதான் படத்தின் உண்மையான ஹீரோ : சல்மான் கான்

10 நவ, 2015 - 17:12 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-shares-about-Prem-Ratan-Dhan-Payo-movie

பஜரங்கி பைஜான் படத்தின் வெற்றிக்கு பிறகு சல்மான் கான் நடித்துள்ள படம் பிரேம் ரத்தன் தான் பயோ படம். இந்த படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் தனது கேரக்டர் மற்றும் அனுபவங்கள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.


ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்துடன் பணியாற்றுகிறீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?


ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனம், எனது வாழ்க்கையின் ஒருபகுதி என்றே நினைக்கிறேன். எனது திரைவாழ்க்கையை துவக்கியது இந்த நிறுவனத்தின் மூலம் தான். எனது முதல்படமான மைனே பியார் கியா படத்தை தயாரித்தது ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனம் தான்.மீண்டும் அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜ்ஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்தை எனது குடும்பமாகவே நான் கருதுகிறேன்.


சூரஜ் பர்ஜாத்யாவிடம் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?


சூரஜ் பர்ஜாத்யாவிடம் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். சூரஜ் பர்ஜாத்யா, சிறந்த இயக்குநர் மட்டுமல்லாமல் சிறந்து வசனகர்த்தாவும் கூட. அவரது திரைக்கதை, வசனம், பாடல்கள், காட்சிகள் உள்ளிட்டவைகள் அனைவரையும் கவரும்வகையில் இருக்கும். எந்தவொரு சாதாரண நடிகரையும், சூரஜ் பர்ஜாத்யாவின் கைவண்ணம், பெரிய கலைஞராக மாற்றிவிடும். இதுதான் என்னில் நிகழ்ந்துள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படம், சாதாரணமான என்னை பெரிய நடிகனாக்கியது.




சோனம் கபூருடன் இணைந்து பணியாற்றியது குறித்து?


சோனம் கபூருடன் இணைந்து பணியாற்றியது இனிய நிகழ்வாக இருந்தது. சோனம் கபூருடன் இணைந்து இரண்டாவது படத்தில் நடித்துள்ளேன். சோனம் கபூர் மட்டுமல்லாமல், ஷாவரியாவும் இப்படத்தி்ல் நடித்துள்ளார். ஷாவரியா திறமையான மற்றும் சிறந்த நடிகை. அவருடன் இணைந்து நடிப்பது மிகவும் எளிமையானது. ஷாவரியா, அனில் கபூரின் மகள் ஆவார். நடிப்பில் அப்பாவை மிஞ்சிவிடுவார் என்று நினைக்கிறேன்.


உங்கள் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறதே! எவ்வாறு உணர்கிறீர்கள்?


எனது நடிப்பு சிறப்பாக இருப்பதற்கு நான் மட்டும் காரணமல்ல. சிறந்த கதை, திரைக்கதை, காட்சியமைப்பு உள்ளிட்டவைகளே நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருப்பதற்கு காரணம். வசன உச்சரிப்புகளும், நடிகரை தனித்துவமாக காட்ட உதவுகின்றன.


பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் உங்களது ரோல்?


பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நான் பிரேம் என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். மைனே பியார் கியா, ஹம் ஆப் கே ஹைன் கவுன் மற்றும் ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தில் என்னை பார்த்ததைப்போன்று, இந்த படத்திலும் என் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படம், மைனே பியார் கியா படத்தை ஒத்தது ஆகும். என்னுடைய இந்த நிலைக்கு இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா தான் காரணம்.


பிரேம் ரத்தன் தான் பயோ படம், இளைஞர்களுக்கான பாடமா?


அப்படியென்று உறுதியாக என்னால் கூறிவிட முடியாது. ஆனால், இந்த படம், நிச்சயம், இளைஞர்களின் மனநிலையை மாற்றும் என்று சொல்ல முடியும். ஏனெனில், தற்போதைய இளைஞர்களின் மனநிலை மாற்றத்தை, திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் மாற்றமுடியும். இந்த படம், இளைய தலைமுறையினர் அல்லது இளைஞர்களின் மனமாற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த படம், உயர்தர, நடுத்தர மற்றம் ஏழ்மையான மக்களை நிச்சயம் சென்றடையும்.


50 வயதை கடந்துவிட்டீர்கள், ஆனால் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்களே? என்ன ரகசியம்?


எனக்கு இன்னும் 50 வயது ஆகவில்லை, வரும் டிசம்பர் 27ம் தேதி தான் எனக்கு வயது 50 ஆகிறது. எனது இளமைக்கு காரணம், நாள் மற்றும் நேரம் தவறாத உடற்பயி்ற்சி தான். பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் ஹேண்ட்சம் கேரக்டரில் நடித்துள்ளேன். அதேநேரம், சுல்தான் படத்திற்காக எனது உடல்எடையை கணிசமான அளவிற்கு ஏற்றியுள்ளேன். இது சாத்தியமானதற்கு உடற்பயிற்சி மற்றும் உணவுமுறையும் தான் காரணம்.


தபாங் 3 எந்தளவில் உள்ளது?


தபாங் 3 படத்தின் கதை இன்னும் முழுமையடையாததால் அப்படம் தற்போதைய அளவில் கிடப்பிலேயே உள்ளது. மற்ற படங்களை ஒப்பிடும்போது, தபாங் 3 படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படுவதால், படப்பிடிப்பும் நீண்ட நாள் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சல்மான் கான் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in