Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசேதுபதியின் உஷார் நடவடிக்கை!

10 நவ, 2015 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Vijay-sethupathi-cautionery-steps

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமான விஜயசேதுபதி, அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என 4 ஹிட் படங்களை தொடர்ச்சியாக கொடுத்தார். இதனால், அவரது மார்க்கெட் கிடுகிடு வென்று உயர்ந்து நின்றது. முன்னணி டைரக்டர்களே அவரை வைத்து இயக்க கால்சீட் கேட்டனர்.


ஆனால், ஆரம்பத்தில் குறும்பட டைரக்டர்களின் படங்களில் நடித்த விஜயசேதுபதி, பின்னர் சில பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் எவ்வளவு வேகமாக அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே சென்றதோ அதேவேகத்தில் இறங்குமுகத்தையும் சந்தித்தது. இந்த நேரத்தில்தான் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜயசேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.


விளைவு, இப்போது முன்னணி டைரக்டர்கள் என்பதை மறந்து விட்டு, ஆரம்ப காலத்தைப்போன்று வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார். அதனால் இப்போது முகத்தைப்பார்த்து கதையை கேட்காமல், முகத்தை திருப்பிக்கொண்டு கதையை கேட்கிறாராம். அந்த வகையில் கதை பிடித்திருந்தால் மட்டுமே கேட்டு முடித்ததும் சிரிக்கிறாராம் விஜயசேதுபதி. இல்லையேல் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருக்கிறாராம். அதோடு, தோல்வி படம் இயக்கியவர்கள் தன்னை தொடர்பு கொண்டாலும் அப்புறம் பார்க்கலாம் என்று நழுவிக்கொள்கிறாராம். அவரது இந்த திடீர் மாற்றம் சில டைரக்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in