ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நடிகை ஸ்ரீதேவி எனக்கு தங்கை முறை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தனியார் சேனலில், தீபாவளி நிகழ்ச்சியாக நடிகர் கமல்ஹாசனின் பேட்டி ஒளிபரப்பானது. நிகழ்சசி தொகுப்பாளரின் பல கேள்விகளுக்கு அசராமலும் அதே சமயத்தில் தன்பாணியிலேயே தெளிவாகவும் கமல் பதிலளித்தார்.
தனது பழைய போட்டாக்களை நினைவுகூர்ந்து வந்த கமல்ஹாசன், ஸ்ரீதேவியுடனான போட்டோவை பார்த்து சொல்லும்போது, நான் ஸ்ரீதேவியுடன் இணைந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். நான் கொஞ்சம் அதட்டிப்பேசினாலே, ஸ்ரீதேவி பயந்துவிடுவார். ஸ்ரீதேவி எனது குடும்பத்தில் ஒருவர், அவர் எனக்கு தங்கை முறை என்று கூறினார்.
ஊர்வசி, ஸ்ரீபிரியா, கோவைசரளா உள்ளிட்டோர்களுடனான போட்டோக்கள் பற்றியும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.
ரஜினி என்றால் நட்பு என்றும், சூர்யா என்றாலே நடிகர் சிவக்குமார், மனோரமா என்றால் அன்பு, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றால் நம் வாழ்க்கை;வாலி என்றால் பெருந்தன்மை உள்ளிட்டவைகளே நினைவிற்கு வருவதாக கமல் கூறினார்.