மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸி நடிகையாகி இருக்கிறார் நடிகை தமன்னா. தற்போது கார்த்தி-நாகர்ஜூனாவுடன் இணைந்து தோழா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். அதேப்போன்று தெலுங்கிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த தீபாவளி சிறப்பு பேட்டி இதோ...
தீபாவளியை மும்பையில் குடும்பத்தோடு கொண்டாடுகிறேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு நான், அப்பா-அம்மா, அண்ணன் ஆகியோருடன் தீபாவளி கொண்டாட உள்ளேன். மும்பையில், மகாலட்சுமி கோயிலுக்கு போவது வழக்கம், இந்தாண்டு அங்கு செல்கிறேன். அங்கு பூஜைஎல்லாம் முடித்துவிட்டு, அம்மா செய்யும் குலாப் ஜாமை ஒரு பிடி பிடிப்பேன். இந்த தீபாவளிக்கு சுடிதார் வாங்கியுள்ளேன். எனக்கு பிடித்த கலர் மஞ்சள் மற்றும் பிங்க், அந்த நிறத்தில் அதை வாங்கியுள்ளேன். சொன்னால் நம்ம மாட்டீர்கள், வீட்டில் நான் தான் ரங்கோலி போட்டு விளக்கு ஏற்றி பூஜை எல்லாம் செய்வேன்.
தீபாவளிக்கு நான் வெடி எல்லாம் வெடிப்பது கிடையாது. எனது 10வது வயதிலேயே வெடி வெடிப்பதை நிறுத்திவிட்டேன். இதுக்கு பின்னாடி ஒரு கதை உள்ளது. டிவியில் பட்டாசு தயாரிக்க குழந்தை தொழிலாளர் பயன்படுத்துவதை பார்த்தேன், அவர்களது நிலையை பார்த்து நானும், எனது அண்ணாவும் வெடி வெடிப்பதை நிறுத்திவிட்டேன்.
இந்தாண்டு பாகுபலி படம் ரிலீஸாகி எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனக்கு இந்த வருடம் பாகுபலி தீபாவளி என்று சொல்லலாம். பாகுபலி-2 டிசம்பரில் துவங்குகிறது. இந்தப்படமும் வெற்றி பெற வேண்டி கொள்ளுங்கள். கார்த்தி-நாகர்ஜூனாவுடன் தமிழ், தெலுங்கில் ஒரு படம் நடித்து வருகிறேன்.
தமிழ் ரசிகர்களை நான் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதிக அன்பையும், வெற்றியையும் கொடுத்துள்ளார்கள். ஹிருத்திக் ரோஷன் உடன் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். பேய் படங்களில் நடிக்க நான் தயாராக உள்ளேன், ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு யாரும் தரவில்லை, கிடைத்தால் நான் நடிக்க ஆவலாய் இருக்கிறேன்
இந்த தீபாவளி எல்லோருக்கும் சந்தோஷ தீபாவளியாக அமையட்டும், இன்னும் நல்ல நல்ல படங்களுடன் உங்களை நான் சந்திக்கிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இவ்வாறு தமன்னா கூறினார்.