Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பிரேம் ரத்தன் தான் பயோ' என் சினிமாவை வாழ்க்கையை மாற்றும் - சோனம் கபூர்!

09 நவ, 2015 - 13:43 IST
எழுத்தின் அளவு:
I-hope-film-Prem-Ratan-Dhan-Payo-will-change-my-career--Sonam-Kapoor

பாக் மில்கா பாக், ராஞ்சனா போன்ற வெற்றி படங்களில் நடித்திருப்பவர் நடிகை சோனம் கபூர். பாலிவுட்டின் மாஜி ஹீரோ அனில் கபூரின் மகளான இவர், தற்போது சல்மான் கான் உடன் நடித்துள்ள பிரேம் ரத்தன் தான் பயோ படம் வருகிற நவம்பர் 12ம் தேதிக்கு ரிலீஸாகிறது. இப்படம் பற்றியும், சல்மான் கான் உடன் நடித்த அனுபவங்கள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டதாவது...


7 ஆண்டுகளுக்கு பிறகு சல்மான் உடன் நடிக்கிறீர்கள், அவரிடம் ஏதேனும் மாற்றம் உள்ளதா.?


சல்மான் கான் உடன் சவாரியா என்ற படத்தில் நடித்தேன். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவருடன் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். சல்மானிடத்தில் எந்த மாற்றமும் இல்லை. சல்மானின் தீவிர ரசிகன் நான், அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை, மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம். சல்மான் எனும் பெரிய நடிகர், சூரஜ் பார்ஜாத்யா எனும் பெரிய இயக்குநர், ராஜஸ்ரீ எனும் பெரிய தயாரிப்பு நிறுவனம்... இப்படி ஒரு பிரமாண்டம கூட்டணியில் நான் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்.


இயக்குநர் சூரஜ் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி..?


சூரஜ் பார்ஜாத்யா படத்தில் நடித்தது அவ்வளவு சந்தோஷம், பிரமாதம். கடந்த ஐந்தாண்டுகளில் அவர் ஒரு படம் மட்டும் தான் இயக்கியிருக்கிறார். மிகவும் திறமையான இயக்குநர் சூரஜ், இவர் போன்ற இயக்குநர்கள் எப்போது புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். இவரிடத்தில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.


உங்களுக்கும், சல்மானுக்கும் 20 வயது வித்தியாசம், அவருடன் ரொமான்ட்டிக் காட்சிகளில் எப்படி நடித்தீர்கள்.?


எனக்கும், சல்மானுக்கும் 20 வயது வித்தியாசம் என்று நான் ஒருபோதும் எண்ணியது கிடையாது. எனக்கு மட்டுமல்ல என்னைப்போன்று மற்ற நடிகைகளான சோனாக்ஷி, தீபிகா, அனுஷ்கா உள்ளிட்ட யாருக்கும் அப்படி ஒரு எண்ணமே தோன்றாது. இது இப்போது மட்டுமல்ல, பழைய நடிகைகள் கூட இந்தமாதிரி ஒரு வயது வித்தியாசத்துடன் நடித்துள்ளார்கள். இந்தப்படத்தை பொறுத்தமட்டில் எனக்கும், சல்மான் கானுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட்டாகியுள்ளது. பிரேம் ரத்தன் தான் பயோ படத்திற்கு பிறகு எனது சினிமா வாழ்க்கை மாறும் என நம்புகிறேன்.


இந்தப்படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்க..?


படத்தில் எனது கேரக்டரை சொல்வதற்கு முன்பாக இந்தப்படத்தை பற்றி சொல்கிறேன். பிரேம் ரத்தன் தான் பயோ படம் ஒரு குடும்ப பாங்கான, காதல் படம். ஆனால் இந்த காதல் படம் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் நான் இளவரசி மைதிலியாக நான் நடிக்கிறேன். பிரேம் எனும் சல்மான் மீது நான் காதல் வயப்படுவேன். இந்தப்படத்தில் என்னுடன் என் உயிர் தோழியான சுவரா பாஸ்கர், சல்மானின் சகோதரியாக நடித்திருக்கிறார்.


இந்தப்படத்தில் நீங்கள் சேலையில் தோன்றுகிறீர்கள், இதுப்பற்றி...?


'பிரேம் ரத்தன் தான் பயோ' படத்தில் அநேக காட்சிகளில் நான் சேலையில் தான் வருகிறேன். இதில் எனது பேஷன் ஆர்வம் மட்டுமல்ல, ராஜஸ்ரீ தயாரிப்பு நிறுவனத்தின் ஈடுபாடும் அதிகம். இந்தப்படம் வெளியான பிறகு இப்பட சேலைகள் பேஷனில் கலக்கும் என நம்புகிறேன்.


நெகட்டீவ் கேரக்டரில் நடிக்கும் ஆசை உள்ளதா.?


எனக்கும் நெகட்டீவ் கேரக்டரில் நடிக்க ஆசை தான். ராஞ்சனா படத்தில் கூட தனுஷக்கு எதிராக நெகட்டீவ் ரோலில் தான் நடித்தேன். ஆனால் அந்தரோல் பெரிய அளவில் ரீச்சாகவில்லை. இதிலிருந்தே எனக்கு நெகட்டீவ் ரோல் செட்டாகவில்லை என்று புரிந்து கொண்டேன். ஆனால் எனது கேரக்டர் வலுவாக அமையும் பட்சத்தில் கண்டிப்பாக நான் நெகட்டீவ் ரோலில் நடிப்பேன்.


உங்கள் அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது.?


கடின உழைப்பு, நேரம் தவறாமை இந்த இரண்டு விஷயங்கள் தான் என் அப்பாவிடம் நான் கற்று கொண்டது. இதை அப்படியே என் வாழ்க்கையில் ஏற்று கொண்டேன். கூடவே அப்பா உடலை எப்போதும் பிட்டாக வைத்து கொள்வார். அதையும் நான் கடைப்பிடிக்கிறேன். இப்போது எனக்கு வயது 30ஆகிறது, ஆனால் எல்லோரும் என்னை 25வயது பெண்ணாகவே பார்க்கிறார்கள். இது கடவுள் எனக்கு கொடுத்த அன்பளிப்பு.


இவ்வாறு சோனம் கபூர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in