விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
சினிமாவில் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய ரோலில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதே வருடத்தில் விக்ரம் நடித்த அந்நியன் படத்திற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அவர் பாடிய கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதனால், நடிகை, பாடகி என்ற இரண்டு முகங்களுடன் சினிமாவில் வளரத் தொடங்கினார் ஆண்ட்ரியா.
பின்னர், கமல் நடித்த வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் நாயகியாக நடித்த கமாலினி முகர்ஜிக்கு டப்பிங் கொடுத்த ஆண்ட்ரியா, அதன்பிறகு டாப்சி, இலியானா உள்ளிட்ட சில வடக்கத்திய நடிகைகளுக்கும் டப்பிங் பேசினார். என்றாலும், அவர் டப்பிங் கொடுத்த நடிகைகள் தமிழில் பெரிதாக வளரவில்லை. இந்த நிலையில், தற்போது தரமணி, வடசென்னை போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆண்ட்ரியா, தற்போது லண்டன் நடிகை எமிஜாக்சனுக்கு குரல் கொடுத்துள்ளார்.
வேலையில்லா பட்டதாரி வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படத்தில் எமிஜாக்சனுக்கு ஆண்ட்ரியாதான் டப்பிங் பேசியிருக்கிறார். அதோடு, இதற்கு முன்பு எமிக்கு வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள் குரல் கொடுத்திருந்தபோது, ஆண்ட்ரியாவின் குரல்தான் அவருக்கு ரொம்ப மேட்சாகியிருக்கிறதாம். அதோடு, தான் ஒரு நடிகை என்பதால் எமிஜாக்சன் கொடுக்க மறந்த ஏற்ற இறக்கங்களை தனது குரலில் கொண்டு வந்து கொடுத்து அவரது நடிப்புக்கு பெரிய பலமாகியிருக்கிறாராம் ஆண்ட்ரியா.