பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். பாலிவுட்டில் ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் கைவசம் அரை டஜன் இந்தி படங்கள் உள்ளன. ஆக, பாலிவுட் சினிமாவின் தற்போதைய முன்னணி வில்லன்களில் நீல் நிதின் முகேசும் ஒருவர். கத்தி படத்திற்கு பிறகு சில இயக்குனர்கள் தமிழ்ப்படங்களில் நடிக்க அவரை அணுகியபோதுகூட, கால்சீட் இல்லை என்று கைவிரித்து விட்டார். இந்த நிலையில், ஒரு ஹாலிவுட் டிவி சீரியலில் நீல் நிதின் முகேஷ் நடிக்கயிருப்பதாக பாலிவுட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹாலிவுட்டில் தயாராகி உலகமெங்கிலும் ஒளிபரப்பாகி வரும் கேம் ஆப் த்ரோசன்ஸ் என்ற சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அவரை அழைத்துள்ளார்களாம். சல்மான்கானுடன் ப்ரேம் ரத்தன் தன் பாயோ -என்ற படத்தில் நீல் நிதின் முகேஷின் நடிப்பைப்பார்த்து விட்டுத்தான் அவருக்கு இந்த ஹாலிவுட் சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். மேலும், சினிமாவில் நெகடீவ் ரோல்களில் அதிகமாக நடித்துள்ள நீல் நிதின் முகேஷ், இந்த ஹாலிவுட் சீரியலில் பாசிட்டீவான வேடத்தில் நடிக்கிறாராம்.